இரசாயனப் போரினால் பாதிப்பிற்கு உள்ளான அனைவருக்குமான நினைவு தினம் – ஏப்ரல் 29
April 30 , 2020 1673 days 492 0
2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு இத்தினத்தை அனுசரிக்க முடிவு செய்தது.
இரசாயன ஆயுத ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த தினத்தின் (ஏப்ரல் 29) காரணமாக இத்தினத்தின் அனுசரிப்பிற்காக ஏப்ரல் 29 என்ற தேதியானது தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
இரசாயன ஆயுதங்களைத் தடை செய்வதற்கான அமைப்பு (OPCW - Organisation for the Prohibition of Chemical Weapons) என்பது 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று நடைமுறைக்கு வந்த இரசாயன ஆயுத ஒப்பந்தத்திற்கான செயல்முறைப்படுத்தும் அமைப்பு மற்றும் அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.
193 உறுப்பு நாடுகளைக் கொண்ட OPCW ஆனது நெதர்லாந்தின் தி ஹேக்கில் தலைமையிடத்தைக் கொண்டுள்ளது.
இந்த அமைப்பிற்கு 2013 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.